தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இ.ஆ.ப. வெளியிட்டுள்ளார்
The Forecast 2 years ago அரசு செய்திகள்
சத்யபிரத சாஹு இ.ஆ.ப.,
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, 2024 ஜன.1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழகத்தில் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இ.ஆ.ப., வெளியிட்டார். இதில் தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களைவிட, பெண் வாக்காளர்கள் 9.85 லட்சம் பேர் அதிகம் உள்ளனர்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தவும் ‘ஓட்டர் ஹெல்ப்லைன் (Voter Helpline) செயலி மூலமாகவும், https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வரும் டிச.9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments