Loading . . .




மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி 2 மணி நேரத்தில் தொடங்கும் : MP ராகுல் காந்தி

The Forecast 1 year ago காங்கிரஸ்

காங்கிரஸ் MP ராகுல் காந்தி மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் உடன் காங்கிரஸ் கட்சியினர்.

சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் உள்ளது.

மேலும் தேர்தலை   முன்னிட்டு, சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் MP ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, "பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அது குறித்து பேசுவதை தவிர்த்து வருகிறார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்புப் பணி 2 மணி நேரத்தில் தொடங்கும். எவ்வளவு வேகமாக அதனை நடத்தி முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக நடத்தி முடிப்போம். தற்போது மத்தியில் உள்ள அரசு எதை செய்ய மறுக்கிறதோ நாங்கள் அதனை செய்வோம். சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 26 லட்சம் விவசாயிகளின் ரூ.23 லட்சம் கோடி கடனை நாங்கள் தள்ளுபடி செய்வோம். தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.7 ஆயிரம் வழங்குவோம்" என்று தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News