Loading . . .




விளவங்கோடு தொகுதியின் விடியல் : Dr. S. விஜயதாரணி MLA

The Forecast 2 years ago காங்கிரஸ்

இந்திய தேசிய காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினர் ( MLA ) Dr. S. விஜயதாரணி

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தொகுதியில் மும்முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்காக சேவை செய்து, மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்களுக்கான தேவைகளை நேரம் , காலம் பாராது அவ்வப்போது நேர்த்தியாகவும், மக்கள் மன விருப்பதிற்கு ஏற்றவாரு போராடி மக்கள் மனதில் என்றும் நிலைதிருப்பவர் விளவங்கோடு தொகுதியின் - இந்திய தேசிய காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினர் ( MLA ) Dr. S. விஜயதாரணி.

Dr. S. விஜயதாரணி MLA, தனது 25 வயது வரை இளைஞர் காங்கிரஸில் தீவிரமாக ஈடுபட்டு, இளைஞர் காங்கிரஸின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பின் 6 ஆகஸ்டு 2016 ரில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு மகளிர் அணி தலைவராகவும் , 4 மார்ச் 2016 முதல் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் , தற்பொழுது தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் சட்டமன்ற கொறடாவாக இருந்து பெண்களால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்ற கூற்றின் உதாரணம் திகழ்கிறார். மேலும் பெண்களுக்கான சமூக உரிமை மட்டுமல்லாது பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அன்றாட அத்தியாவசிய விஷயங்களுக்கும் குரல் கொடுக்கும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் போராளியாக தன் அரசியல் பயனத்தை தொடர்கிறார். தன் தொகுதின் வளர்ச்சிக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும் , கல்வியின் மேம்பாட்டுக்காகவும் நாள்தோறும் குரல் கொடுத்து போராடிவருகிறார்.

20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞரான கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியான இவர் மருத்துவப் பின் புலம் கொண்ட பெற்றோருக்கு பிறந்து , தனது கல்லூரி படிப்பில் சட்டத்துறையை தேர்ந்தெடுத்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டிற்கும் அட்டர்னி பதவி வகித்து, ஒரு நேர்மையான தனித்துவமான வழக்கறிஞராக வாழ்கிறார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்துள்ளார். தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் உறுப்பினராகவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்து அவற்றை நடைமுறையில் கொண்டு வார முயர்ச்சித்தும் வருகிறார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக கரடுமுரடாக இருந்த சாலைகளைச் சீர்படுத்து. சிறிய, பெரிய இணைப்புப் பாலங்களைக் கட்டியுள்ளார். தொகுதியில் அநேக இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கொண்டுவந்துள்ளர். முன்னதாக சிறுபான்மை மலையாள மொழி படிக்கும் மாணவர்கள் மலையாள மொழியில் படிக்க, தேர்வு எழுத அரசிடம் குரல் கொடுத்தார். தனது சொந்த நிதியிலும், தொகுதி நிதியிலும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியைச் சரியாக செலவழிப்பதோடு. தன்னை நாடி உதவி என்று வருவோருக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்ததை. செவ்வன செய்து வந்து கொண்டிருக்கிறார். 

இன்றும் பல்வேறு ரயில்கள் குமரிவரை செல்ல முயற்சி எடுத்தவர். குடிநீர் திட்டப் பணிகள், வடிகால் பணிகள், மத்திய மாநில அரசின் இலவச வீடுகளைப் பெற்றுத் தருவது. அதே சமயம், பல ஏழை மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் உதவுவது , மக்களுக்கான குறை தீர்ப்பு நாள் என்று தனிப்பட்ட ஒரு நாளாக கருதி செயல்படாமல், எல்லா விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது தொகுதியில் அன்றாட நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முதல் ஆளாக கலந்து கொண்டு, சட்டசபையின் கூட்டம் நேரம் போக, எந்நேரமும் தொகுதி மக்களின் தேவைகளுக்கு உழைத்துக் கொண்டிருக்கிருக்கும் ஆக்டிவ் எம்.எல்.ஏ.வாக மக்கள் மனதில் பதிந்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது கவனத்துக்குப் போகும் எந்த விஷயத்தையும் சிறப்பாகச் செய்து முடிக்கிறார். தன் தொகுதி மட்டுமல்ல, எந்தத் தொகுதி மக்களின் குறை என்றாலும், அதற்கான தீர்வுகளை எட்ட முயற்சி செய்கிறார். வாக்குறுதியில் சொன்னதைவிட அதிகமாகச் செய்துள்ளார் என மக்கள் கூறும் அளவில் அனைவரின் மனதிலும் நின்றுள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய  வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு  பணி ஆணைகளை வழங்கினார். அதுமட்டும் அன்றி கல்வியின் மேம்பாட்டுக்காக தனது விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடையால் பேரூராட்சி, கடையால் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு ( M L A C D S ) நிதியின் கீழ் ரூபாய் 19.65 லட்சம் மதிப்பீட்டில் 132 பெஞ்ச் டெஸ்க்கள் 528 மாணவ மாணவிகளுக்கு வழங்கி. மேலும் அப்பள்ளிக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தன் விளைவாக நான்கு வகுப்பறை கட்டிடங்கள் நபார்டு (NABARD ) திட்டத்தின் கீழ் ரூபாய் 85.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது என்பது சிறப்புக்குறியது.

தற்பொழுது மழைக் காலம் என்பதால் தனது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலையடி ஊராட்சியில் நெய்யாறு இடது கரை கால்வாயின் பக்கச்சுவர் பணிகள் குறித்த மக்களுடன் கருத்தாய்வு  நடத்தினார். மேலும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புறக்காரவிளை சாலையில் கான்கிரீட் தளம் அமைக்க ரூபாய் பத்து லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டியுள்ளார். அது மட்டுமாற்றி தமிழக சட்டமன்ற கூட்டம் துவங்கும் போது நிச்சயமாக பல நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பாசன குளங்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை சரி செய்ய உரிய  நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவேன், என்றும் உறுதியளித்துள்ளர்.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News

Latest News