தேர்தல் நடைமுறையில் முக்கிய மாற்றங்கள்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
Janani G 4 hours ago தமிழ்நாடு
சென்னையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். மேலும், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும். கடைசி இரண்டு சுற்றுகள் மீதமிருக்கும் போதே தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்த மாற்றங்கள் தேர்தல் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments