தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கோயம்புத்தூரில் புதுப்பிக்கப்பட்ட உக்கடம் பேருந்து நிலையத்தின் முதல் முனையத்தை காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கினார். உக்கடம் பேருந்து நிலையம் மொத்தம் ₹21.55 கோடி செலவில் புதுப்பித்து மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் முதல் கட்டமாக ₹13 கோடி செலவில் முடிக்கப்பட்ட பணிகள் தற்போது பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
இதனுடன் கோயம்புத்தூர் நகரின் வட மண்டலம் மற்றும் மேற்கு மண்டலங்களில் அமைக்கப்பட்ட இரண்டு “முதல்வர் படைப்பகம்” மையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். இம்மையங்கள் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
பேருந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் நகர போக்குவரத்தை சீராக இயக்கவும் பயணிகளுக்கு வசதிகளை அதிகரிக்கவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments