Loading . . .




உடங்குடி அனல் மின் நிலைய அலகு தொடக்கம்: பல திட்டங்களை திறந்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

Janani G 1 month ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உடங்குடி அனல் மின் நிலையத்தின் முதல் அலகு தொடங்கப்பட்டதுடன், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிறைவு பெற்ற வளர்ச்சி திட்டங்களும் திறந்து வைக்கப்பட்டன.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் அமைத்துள்ள 2×660 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தின் முதல் அலகை முதல்வர் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் உடங்குடி பகுதியில் ₹13,077 கோடி செலவில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நகராட்சி நிர்வாகத்துறை மூலம் ₹177.17 கோடி செலவில் நிறைவு பெற்ற 35 பணிகளையும், பேரூராட்சித் துறை மூலம் ₹32.23 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 9 பணிகளையும் அவர் திறந்து வைத்தார். அதேபோல் சென்னை மாநகராட்சி கட்டிய ₹2.50 கோடி மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடமும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்த திட்டங்கள் மாநிலத்தின் மின் உற்பத்தி திறனையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News