Loading . . .




காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் K.P. முத்துக்குமாரின் தலைமையில் புதிய எழுச்சி பெரும் ஈரோடு மாவட்டம்!

The Forecast 2 days ago ஈரோடு

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் BLA 2 நிர்வாகிகள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் K.P. முத்துக்குமார், கட்சியின் செயல்பாடுகள், அமைப்புப் பலம், தேர்தல் தயார்நிலை குறித்து தெளிவான வழிகாட்டுதலை வழங்கினார். அவர் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் பெயரும் புகழும் மக்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. மக்களுடன் நேரடி தொடர்பு, களப்பணி, இளைஞர்களுக்கு ஊக்கம் ஆகியவை அவரது தலைமையின் அடையாளமாக மாறியுள்ளது. பொதுமக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. எதிர்காலத்தில் மக்களின் விருப்பமான தலைவராக அவர் உருவெடுப்பார் என்ற நம்பிக்கை ஈரோடு மக்களிடையே வலுப்பெறுகிறது.

இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் RM பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் LP பாலசுப்பிரமணியம், வடுகபட்டி பேரூராட்சித் தலைவர்  விசுவநாதன், மாவட்டச் செயலாளர் அக்கினி பாலு, ஈரோடு வட்டாரத் தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி, ரவி, கதிர்வேல், தலைவர் பெரியசாமி, விளையாட்டு பிரிவு மாவட்டத் தலைவர், பிரபு, அவல்பூந்துறை பேரூர் காங்கிரஸ் தலைவர் கௌரிபாலாஜி, துய்யம்பூந்துறை கிராம காங்கிரஸ் தலைவர் குமார், இளைஞர்கள் நிர்வாகிகள் அருள் சோபியா, நல்லசிவம், முத்து, மற்றும் மாநில, மாவட்ட, நகர, பேரூர், கிராம நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

ஈரோடு Relateted News

Latest News