Loading . . .




கொல்லிமலைப் பகுதியில் அரியூர் சோலைக் காட்டில் அமைக்கப்பெற்ற தமிழ்நாடு அரசின் முதல் இரவு வான் பூங்காவினை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்

The Forecast 5 hours ago தமிழ்நாடு

சென்னை, தலைமைச் செயலகத்தில், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் அரியூர் சோலைக் காட்டில் அமைக்கப்பெற்ற தமிழ்நாடு அரசின் முதல் இரவு வான் பூங்காவினையும், 10 மாவட்டங்களில் புதிதாக நிறைவு செய்யப்பட்ட 23 மரகத பூஞ்சோலைகளையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத்துறை சிறப்பு செயலாளர் அனுராக் மிஸ்ரா, இ.வ.ப., சேலம் மண்டல வனப்பாதுகாவலர் சி.கலாநிதி, நாமக்கல் மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News