Loading . . .




ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொடர்பான, BLA 2 நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் K.P. முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார

The Forecast 2 days ago ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் BLA 2 நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில்  ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் K.P. முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார். ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கொடுமுடி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் BLA 2 நிர்வாகிகள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் K.P. முத்துக்குமார் பங்கேற்று, கட்சியின் எதிர்கால செயல்திட்டங்களை விளக்கினார். அவர் பொறுப்பேற்ற பின்னர், ஈரோடு தெற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளது. அடித்தள நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அணுகும் அவரது பாணி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 

இளைஞர்கள், பெண்கள், மூத்த வயதானோர் மட்டும் அனைத்து பொதுமக்களின் மத்தியில் அவருக்கு கிடைக்கும் ஆதரவு, வருங்காலத்தில் காங்கிரஸின் முக்கியமான தலைவராக அவர் உயர்வார் என்பதற்கான உறுதியான சான்றாக விளங்குகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியில் முத்த தலைவர் ராகுல் காந்தியின் சிந்தனைக் கொண்டு, ஈரோடு மக்களின் வளர்ச்சிக்கு, K.P. முத்துக்குமார் அயராது உழைத்து வருகிறார்.


இக்கூட்டம், வட்டாரத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், டிஸ்கோ முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் RM பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் LP பாலசுப்பிரமணியம், இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் வேம்பரசன், கொடுமுடி பேரூர் காங்கிரஸ் தலைவர் பாபு, சிவகிரி பேரூர் காங்கிரஸ்  தலைவர் கணேஷ் ராம், சேவாதள மாவட்டத் தலைவர் தனபால் கவுன்சிலர் தம்பி, ரைஸ் மில் சேகர், ஜெயராமன், சதிஷ், விளையாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் பிரபு மற்றும் மாநில, மாவட்ட, நகர, பேரூர், கிராம நிர்வாகிகள், பல காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


0 Comments

Post your comment here

ஈரோடு Relateted News

Latest News