கமேனி படுகொலை: "சர்வதேச சட்ட மீறல்" : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
The Forecast 1 day ago உலக செய்திகள்
ஈரானின் முக்கியத் தலைவர் கமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தச் சம்பவத்தை "காட்டுமிராண்டித்தனமான செயல்" என மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அறநெறிகள் மற்றும் சர்வதேச சட்டங்களை முற்றிலும் புறக்கணித்து இப்படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய அமைதியைச் சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் போரின் போது ஈரான், ரஷ்யாவிற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ராணுவ ரீதியாகத் துணை நின்றது குறிப்பிடத்தக்கது. அந்த நெருக்கமான உறவின் அடிப்படையில், ஈரானின் இறையாண்மை மீதான இந்தத் தாக்குதலை ரஷ்யா வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதோடு, வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
0 Comments