Loading . . .




பெண்களை நில உடைமையாளர்களாக்கும் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ 

The Forecast 1 month ago தமிழ்நாடு

விவசாய கூலிகளாக பணியாற்றும் SC, ST சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் நோக்கத்துடன் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்கள் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்கலாம். நிலம் வாங்குவதற்குத் தேவையான கடனுதவியும், ரூ.5 லட்சம் வரை மானியமும் அரசு வழங்குகிறது. இதன் மூலம் பெண்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து பொருளாதார ரீதியாக முன்னேற வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tahdco.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பெண்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News