சத்தீஸ்கரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இலவச கல்வி வழங்கப்படும் : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
The Forecast 1 year ago காங்கிரஸ்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
சத்தீஸ்கரில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலையில், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இலவசக் கல்வி வழங்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
மேலும், கான்கேர் மாவட்டத்தில் உள்ள பானுபிரதாப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, டெண்டு இலை சேகரிப்பில் ஈடுபடும் குடும்பங்களுக்கு ஆண்டு போனஸ் 4,000 ரூபாயும் மற்றும் சிறு வன விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 10 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படும் என்றார் கூறினார்.
0 Comments