நாட்டு மக்கள் விருப்பப்படி ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுவார் : காங்கிரஸ் எம். பி. திருநாவுக்கரசர்
The Forecast 2 years ago காங்கிரஸ்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்
ஆளுநர் ரவி தமிழக மக்களின் எண்ணங்களுக்கு மாறாக செயல்படுகிறார். ஒரு சில இடங்களில் ஏற்படும் பிரச்சினைக்காக, ஒட்டுமொத்த தமிழகத்திலும் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது எனச் சொல்ல முடியாது, என்று மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் பேசிய அவர், இண்டியா கூட்டணியில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். நாட்டு மக்கள் விருப்பப்படி ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுவார், என்று கூறினார்.
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது பற்றி காங்கிரஸ் தேசிய தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் ராகுல் போட்டியிட்டால், திருச்சியில் நான் போட்டியிடாமல் அவருக்காக தேர்தல் வேலை செய்ய தயாராக உள்ளேன். கடந்த முறை திருச்சி தொகுதியில் நான்கரை லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன் அங்கு ராகுல் காந்தி போட்டியிட்டால், கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற உழைப்பேன் என்று கூறினார்.
0 Comments