Loading . . .




மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

The Forecast 2 years ago காங்கிரஸ்

காங்கிரஸ் MP ராகுல் காந்தி

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, MP ராகுல் காந்தி விடுத்துள்ள எக்ஸ் பதிவில், "எனது பலம், எனது பாட்டி. அவர் நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்தார். நாட்டை எப்போதும் நான் பாதுகாப்பேன். உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கின்றன; என் இதயத்தில்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் எங்களின் வழிகாட்டியுமான இந்திரா காந்திக்கு, அவரது நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறேன். நமது நாட்டை வலிமையாகவும், முன்னேற்றகரமாகவும் கொண்டு செலுத்தியதில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் அவர். திறமை மிக்க தலைமைப் பண்பு, தனித்துவமான செயல் முறை, தொலைநோக்குப் பார்வை கொண்டவர் அவர்" என்று தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடமான ஷக்தி ஸ்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, MP ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் AICC பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.



0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News