Loading . . .




சுற்றுலாத் துறை நிறுவனங்கள் முறையாக பதிவு செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்ற தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

The Forecast 2 years ago தேனி

தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் ஷாஜிவனா உத்தரவிட்டுள்ளார்.  இதற்கான அரசாணைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, சுற்றுலா வழிகாட்டிகள், ஆபரேட்டர்கள், டிராவல் ஏஜென்ட்கள், போக்குவரத்து ஆபரேட்டர்கள் என செயல்படும் நிறுவனங்கள் https://www.tntourismtors.com என்ற இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தேனி சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது 73977 15689 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.

0 Comments

Post your comment here

தேனி Relateted News