தேனி மாவட்டத்தில் உள்ள கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மனநலம் காக்கும் மனம் திட்டத்தை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் மருத்துவ கல்லூரி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் செய்தியாளர்களிடம் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டார். மேலும்,தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் சேர்வதற்கு இடையூராகவும் இருக்கிறார்.கல்லூரி இயக்குனர் மீது இவருக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.மேலும், மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்வதும் இல்லை என்று பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.இவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments