Loading . . .




கண் பரிசோதனை மருத்துவ முகாம்!

The Forecast 3 years ago தேனி

திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கட்சியினர் நலத்திட்டங்கள், அன்னதானம் போன்ற பல்வேறு விஷயங்களை செய்துவரும் நிலையில்  தற்போது தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அல்லிநகரம் திமுக வினர் தங்கதமிழ் செல்வன் தலைமையில்,தேனி வாஸன் கண் மருத்துவமனை குழுவினருடன் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தினர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்களும்,கட்சி நிர்வாகிகளும் கண் பரிசோதனை செய்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்வில் தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா அவர்களும் கலந்துகொண்டார்.

0 Comments

Post your comment here

தேனி Relateted News