
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவும், பூத் கமிட்டி மாநாடு நடத்தவும் டெல்லி சென்றுள்ளார். மல்லிகார்ஜுன கார்கேவின் 50 ஆண்டுகால தேர்தல் அரசியல் புத்தக வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார். தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் காலியாக உள்ள 7 மாவட்ட தலைவர்கள் நியமனத்திற்கான பட்டியலை கர்கேவிடம் அழகிரி பரிந்துரை செய்து ஒப்படைத்தார். கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் முன்னாள் தலைவர்கள் பங்கேற்காதது குறித்தும், கறுப்புக்கொடி காட்டியது குறித்தும் மேலிடத்தில் புகார் அளித்தாக கூறப்படுகிறது.
0 Comments