புயுலால் மின்தடை ஏற்படாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு
The Forecast 2 years ago அரசு செய்திகள்
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப.,
வங்கக் கடலில் உருவானமிக்ஜாம் புயல் காரணமாக மழைநீர் தேங்கியுள்ள சென்னை, நுங்கம்பாக்கம் 33/11 கி.வோ. துணை மின் நியைத்தில் கடும் மழையிலும் தமிழ்நாடு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
புயலின்போது மின்தடை ஏற்படாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மின்வாரிய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவித்தார். குறிப்பாக, மருத்துவமனைகள், குடிநீர் வழங்கல் வசதி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மின்தடை ஏற்படாமல் தடுக்கவும் அறிவுறுத்தினார். மேலும் மாநில பேரிடர் மையம் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு மையங்களில் மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களில் மின்னுற்பத்தி பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., இயக்குனர் (பகிர்மானம்) இரா.மணிவண் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments