Loading . . .




''வெள்ள நிவாரண தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படும்'' என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்

The Forecast 2 years ago அரசு செய்திகள்

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ ஆ.ப, முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள்

சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகளை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதில்,"சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழையில் பாதிக்கப்பட்ட வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு சென்னை வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் ஆலோசகர் குணால் சத்யார்தி தலைமையில் 5 பேர் இடம்பெற்றுள்ள குழு வருகிறது. வேளாண்மை, நெடுஞ்சாலை, நிதி, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 5 பேர் வந்து ,வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளனர்" என்றார்.

 "மேலும் நிவாரணம் தொடர்பாக கூறிய தலைமை செயலாளர் , மக்களுக்கு நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். அதுதொடர்பான அரசாணை  வெளியிடப்படும். அதில் மற்ற விவரங்கள் அனைத்தும் வெளியிடப்படும்" என்றார். முன்னதாக, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மணலி, எர்ணாவூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, எண்ணெய்ப் படலம் படர்ந்துள்ள பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், அப்பகுதிகளில், நடைபெறும் மருத்துவ முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ ஆ.ப,  இன்று பள்ளிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் பெருங்குடி மண்டலம், வார்டு-190, பள்ளிக்கரணை சென்னை தொடக்கப் பள்ளியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அவ்விடத்தில் தூய்மை பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஷ் அகமது, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி. ஜி. வினய், இ.ஆ.ப, மண்டல கண்காணிப்பு அலுவலர் வி.ஆர்.சுப்புலட்சுமி, இ.ஆ.ப, தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News