எண்ணூர் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு அகற்றும் பணிகளை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்
The Forecast 2 years ago அரசு செய்திகள்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப.,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எண்ணூர் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை குறித்து விளக்கினார். மற்றும் அரசு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை கேட்டறிந்தார்.
அவ்வாய்வின்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப.,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments