தமிழ்நாடுக் கல்வெட்டுகள் என்னும் தலைப்பில் ஆய்வு கட்டுரையின் தொகுப்பு நூலினை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வெளியிட்டார்
The Forecast 2 years ago அரசு செய்திகள்
அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், நிதித் துறை மற்றும் தொல்லியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன்,இ.ஆ.ப., சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் க.மணிவாசன்,இ.ஆ.ப.,
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தொல்லியல் துறை சார்பில் “தொன்மைத் தமிழ்நாடு” என்னும் தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து, தமிழ்நாடுக் கல்வெட்டுகள் என்ற ஆய்வு கட்டுரையின் தொகுப்பு நூலினை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நிதித் துறை மற்றும் தொல்லியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன்,இ.ஆ.ப., சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் க.மணிவாசன்,இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கா.ராஜன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் க.சுந்தர், தொல்லியல் துறை இணை இயக்குநர் இரா.சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
0 Comments