தூத்துக்குடிக்கு நேரில் சென்ற முதல்வர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
The Forecast 2 years ago அரசு செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் பி. கீதா ஜீவன், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன்,இ.ஆ.ப.,
அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார், மேலும் எட்டையபுரம் 3-வது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன்,இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி. லட்சுமிபதி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments