Loading . . .




"உலக முதலீட்டாளர் மாநாடு 2024" நடைபெறும் இடத்தை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

The Forecast 2 years ago அரசு செய்திகள்

தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகின்ற ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதி "உலக முதலீட்டாளர் மாநாடு 2024" நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர்/சென்னை மெட்ரோ இரயில் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப, பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., செயல் இயக்குநர் டாக்டர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News