பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் மெய்த்தன்மை குறித்து மாநிலக் கூர்நோக்குக் குழுக்களில் நிலுவையினங்கள் குறித்தும், அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
The Forecast 2 years ago அரசு செய்திகள்
அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நல இயக்குநர் த.ஆனந்த், இ.ஆ.ப., காவல் துறைத் தலைவர் முனைவர் பி. சாமூண்டீஸ்வரி, இ.கா.ப.,
நேற்று தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் மெய்த்தன்மை குறித்து மாநிலக் கூர்நோக்குக் குழுக்களில் நிலுவையினங்கள் குறித்தும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989-இன் கீழ், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நல இயக்குநர் த.ஆனந்த், இ.ஆ.ப., காவல் துறைத் தலைவர் முனைவர் பி. சாமூண்டீஸ்வரி, இ.கா.ப., பழங்குடியினர் நல இயக்குநர் எஸ். அண்ணாதுரை, ம.தொ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments