Loading . . .




தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் குடும்ப அமைப்பில் வளர்வதை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள “விதை” மற்றும் “நிழல்” ஆகிய இரு குறும்படங்களை அமைச்சர் பி. கீதா ஜீவன் வெளியிட்டார்

The Forecast 2 years ago அரசு செய்திகள்

நேற்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்புத்துறை, யூனிசெப் (UNICEF) மற்றும் சியாப் (SIAPP) அமைப்பும் இணைந்து குழந்தைகள் பெற்றோருடன் ஒரு குடும்பமாக வளர்வதன் முக்கியத்துவத்தை பற்றியும், வளர்ப்புப் பராமரிப்பு சேவையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் குடும்ப அமைப்பில் வளர்வதை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள “விதை” மற்றும் “நிழல்” ஆகிய இரு குறும்படங்களை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசுச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர் இரா.சீதாலட்சுமி, இ.ஆ.ப., இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் மற்றும் சியாப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் சியாமளா நடராஜ். திட்ட இயக்குநர் முனைவர் கே.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News