Loading . . .




பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

The Forecast 2 years ago அரசு செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைகளுக்கு பட்டாக்கள் வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பிற துறைகளில் உள்ள நிலங்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டங்கள் நடைபெறும் இடங்களில், நில உரிமை மாற்றம் செய்வது குறித்தும், பயனாளிகளுக்கு விற்பனை பத்திரம் வழங்குவது, பட்டாக்கள் வழங்குவது மற்றும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதிகளில் உள்ள நில உரிமை மற்றும் வாழ்விட உரிமை தொடர்பான பிரச்சனைகளை குறித்து எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள்/ அரசு முதன்மைச் செயலாளர்கள் / அரசு செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News