Loading . . .




மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., பொதுமக்களுக்கு வழங்கினார்

The Forecast 2 years ago தேனி

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கலைவாணர் அரங்கில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., பொது மக்களுக்கு  வழங்கினார்.

அதுமட்டுமன்றி தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடைந்து வரும் மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துச்செய்தி வாழ்த்து மடலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தேனி Relateted News