Loading . . .




20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகள் இயக்கத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து, தொடங்கி வைத்தார்கள்

The Forecast 2 years ago அரசு செய்திகள்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் , நேற்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், கிண்டி அலுவலகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  50 புதிய பேருந்துகள் இயக்கத்தை  பொது மக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து, தொடங்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் (Electronic Ticketing Machine) மூலமாக பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

இவ்விழாவில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குநர் க.குணசேகரன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News