Loading . . .




தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை : 2.0, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

The Forecast 2 years ago அரசு செய்திகள்

சென்னை, கிண்டியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில், இரண்டு நாட்கள் (28.02.2024 - 29.02.2024) நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை -2.0 (Tamil Nadu Climate Summit - 2.0) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, "காலநிலை கல்வியறிவு - விளையாட்டு முறை சார்ந்த கல்வியை” வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சி.வீ. மெய்யநாதன், சென்னையிலுள்ள இங்கிலாந்து நாட்டு தூதரகத்தின் துணைத் தூதர் ஆலிவர் பால்ஹாட்செட், தலைமை நிர்வாக அதிகாரி ஆற்றல் சுற்றுச் சூழல் மற்றும் நீர் சபை முனைவர். அருணாபா கோஷ், சுற்றுச் சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் / தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தலைமை திட்ட இயக்குநர் ஏ.ஆர். ராகுல் நாத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News