Loading . . .




2024 மக்களவை பொதுத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டிற்கு, மத்திய ஆயுத பாதுகாப்புப் படை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

The Forecast 2 years ago அரசு செய்திகள்

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, இ.ஆ.ப., மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி எஸ்.ஆர். சரவணன், இ.கா.ப., ஆயுத படையின் கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர்/படைகளை அனுப்புவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரி எச்.எம்.ஜெயராம், இ.கா.ப.,

தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, இ.ஆ.ப., தலைமையில் 2024 மக்களவை பொதுத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டிற்கு மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் 25 கம்பெனிகளை பிரித்து வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல் துறைத் தலைவர் / மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை / மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி எஸ்.ஆர். சரவணன், இ.கா.ப., ஆயுத படையின் கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர்/படைகளை அனுப்புவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரி எச்.எம்.ஜெயராம், இ.கா.ப., மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News