Loading . . .




தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.14.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

The Forecast 2 years ago அரசு செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் சார்பில் சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கு தரை மற்றும் நான்கு தளங்களுடன் 14 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை திறந்து வைத்தார்.

மேலும், முதுகலை பட்டப் படிப்பாக இசைத் துறையில் குரலிசை, வீணை, வயலின், மிருதங்கம், நாதஸ்வரம் மற்றும் பரதநாட்டிய படிப்புகளையும், கவின்கலையில் ஓவியம் மற்றும் காட்சிவழித் தகவல் தொடர்பு வடிவமைப்பு படிப்புகளையும், இசை மற்றும் கவின்கலைப் பிரிவுகளின் கீழ் ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கான வகுப்பறைகள், நூலகம் மற்றும் மின்னணு நூலகம், நவீன வசதியுடன் கூடிய ஸ்டூடியோ அறை, செயல்முறை பயிற்சிக்கான கருவிகள் மற்றும் உபகரணங்கள்,  அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலகப் பணியாளர்களுக்கான அறைகள், நவீன வசதியுடன் கூடிய கூட்ட அரங்கு, ஆட்சிமன்றக் குழு கூட்ட அரங்கு, திரையரங்கம், ஆராய்ச்சி படிப்புகளுக்கான மையம் போன்ற பல்வேறு வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.ஆர். காந்தி,  தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சீ. சௌமியா, பதிவாளர் சிவசௌந்தரவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News