பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில், 3 பயனாளிகளின் தொழில் வளர்ச்சிக்க ரூ. 1.81 கோடி மானியம் தமிழக அரசு சார்பில் அமைச்சர் தா. மோ. அன்பரசன் வழங்கினார்
The Forecast 2 years ago அரசு செய்திகள்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் நேற்று தலைமைச் செயலகத்தில், பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில், 2 இளம் புழு வளர்ப்பு மையம், ஒரு பட்டுப் புழு விதை உற்பத்தி மையம் அமைக்க 3 பயனாளிகளுக்கு ரூ. 1.81 கோடி மானியம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் சந்திர சேகர் சாகமுரி, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments