அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையினைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்
The Forecast 2 years ago அரசு செய்திகள்
நேற்று சென்னை, கோட்டூர்புரம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொது நூலக இயக்ககம் சார்பில் முதன் முறையாக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத், இ.ஆ.ப., சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுதலைவர் மனுஷ்யபுத்திரன், இணை இயக்குநர் ச.இளங்கோ சந்திரகுமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments