Loading . . .




மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள பதினோரு (11) மதிப்பீடு மற்றும் ஆய்வு அறிக்கைகளை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்

The Forecast 2 years ago அரசு செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப.,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் , மாநிலத் திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள பதினோரு (11) ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தார். 

இவற்றில், தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களான, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றின் மீதான மதிப்பீடுகளும் மற்றும் பழங்குடி சமுதாயத்தினர் நிலை, பல்கலைக்கழகங்களின் வினாத்தாள்கள் தரம், கால நிலை மாற்றம், வனம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய கருப்பொருள்களின் மீதான ஆய்வு அறிக்கைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்வின்போது, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., உடனிருந்தார்.


0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News