செங்கல்பட்டில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
The Forecast 2 years ago அரசு செய்திகள்
முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் “டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை அறிவித்து இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் 18.02.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 கிராம ஊராட்சிகளுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளுக்கும் 784 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
அரசு நலத்திட்ட உதவிகளாக 5 நபர்களுக்கு ரூ. 13.80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, 5 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தலா ரூ. 13,500 மதிப்பில் SMARTPHONE, செங்கல்பட்டு மாவட்ட அளவில் சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவு போட்டியில் வெற்றிபெற்ற 8 சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசுத் தொகை, மாவட்ட அளவில் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடனுதவி வழங்கிய சிறந்த வங்கிகளுக்குப் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை வழங்கினார். மேலும் , செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகத்தின் அடிக்கலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாட்டினர்.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, ஐ. கருணாநிதி, எம். வரலட்சுமி, எஸ்.எஸ்.பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜே, மேகநாதரெட்டி, இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், சார் ஆட்சியர் நாராயண சர்மா, இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அனாமிகா ரமேஷ், இ.ஆ.ப., விளையாட்டு வீரர் தனுஷ், பாரா விளையாட்டு வீராங்கனை செல்வி. சங்கீதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments