மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் தெரிவு செய்யும் பணி நடைபெற்றது
The Forecast 2 years ago அரசு செய்திகள்
மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆர். லலிதா, இ.ஆ.ப., (கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்)
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று ரிப்பன் கட்டட வளாக அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆர். லலிதா, இ.ஆ.ப., (கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்), தேர்தல் நடத்தும் அலுவலர்கள்/வட்டார துணை ஆணையாளர்கள் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (சென்னை மத்தியம்), கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (சென்னை வடக்கு), மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments