பொதுத்தேர்தலை முன்னிட்டு, காவல்துறை, வங்கிகள், வருமான வரித்துறை, மற்றும் கண்காணிப்புக் குழு உள்ளிட்ட தேர்தல் பணி குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது
The Forecast 2 years ago அரசு செய்திகள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, காவல்துறை, வங்கிகள், வருமான வரித்துறை, ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உள்ளிட்ட தேர்தல் பணி குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் அபிஜித், இ.வ.ப., ஜி. ஏ. ஹரஹானந்த், இ.வ.ப., சுபோத் சிங், இ.வ.ப., மதுகர் குமார், இ.வ.ப., முகேஷ் குமாரி, இ.வ.ப., மானசி திரிவேதி, இ.வ.ப., கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆர். லலிதா, இ.ஆ.ப., (கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்), டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., (இணை ஆணையாளர் (பணிகள்), கூடுதல் காவல் ஆணையாளர்கள் கபில் குமார் சி. சரத்கர், இ.கா.ப., (தலைமையிடம்), அஸ்ரா கார்க், இ.கா.ப., (வடக்கு), பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., (தெற்கு), தேர்தல் நடத்தும் அலுவலர்கள்/வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித், இ.ஆ.ப., (சென்னை தெற்கு), கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (சென்னை மத்தியம்), கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (சென்னை வடக்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments