தேனி மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி மிதிவண்டி பேரணியினை மாவட்ட ஆட்சியர் ஆர். வி. ஷஜீவனா இ.ஆ.ப., கொடியசைத்து தொடங்கி வைத்தார்
The Forecast 2 years ago தேனி
தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் நகராட்சியில் , 2024 மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப., கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இதனைத்தொடர்ந்து ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இ.ஆ.ப., தலைமையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைப்பயண பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments