Loading . . .




வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகளில் ஆய்வு  நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்

The Forecast 1 year ago அரசு செய்திகள்

மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்ட பணிகள் குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இ.ஆ.ப கூறியதில், தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து தொகுதிகளிலும் கல்வி நிறுவனங்களே வாக்கு எண்ணும் மையங்களாக உள்ளன.

மேலும் , இடம்பெயர்தல் காரணமாகவும் வாக்குப்பதிவு குறைகிறது. வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகளில் அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் தொகுதி, வாக்குச்சாவடி வாரியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அது மட்டுமன்றி, இரட்டை பதிவுகளை சோதனை செய்யும் வசதி தற்போது தொகுதிக்குள் மட்டுமே உள்ளது. இதேபோல, நாடு முழுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் இருக்கிறதா என ஆய்வு செய்வதற்கான நடைமுறை வரவேண்டும். மாநிலத்துக்குள் இந்த நடைமுறை குறித்து சோதனை நடத்தப்பட்டது. இனி இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News