Loading . . .




இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலா இ. ஆ. ப., 'வுக்கு கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது

The Forecast 1 year ago அரசு செய்திகள்

தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் மற்றும் நெட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் அடிபடையில், தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை இ. ஆ. ப., அந்தப் பொறுப்பில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு இ. ஆ. ப.,  கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் நிரந்தர தலைவரை நியமிக்கும் வரையில் பிரதீப் சிங் கரோலா இ. ஆ. ப., அந்தப் பொறுப்பை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News