Loading . . .




மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக கருத்துக்கள், ஆலோசனைகளை சேகரிக்க முக்கிய பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்!

The Forecast 1 year ago அரசு செய்திகள்

புதுதில்லியில் உள்ள NITI ஆயோக்கில், பிரபல பொருளாதார நிபுணர்களுடன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக,  பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். 

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற  22ஆம் தேதி தொடங்குகிறது.  ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்கிறார்.  மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.  கடந்த மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி திரௌபதி முர்மு,  இந்த பட்ஜெட் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால நோக்கத்தின் பயனுள்ள ஆவணமாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா மற்றும் முன்னணி பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News