உயர்கல்வித் துறை சார்பில் ரூ.52.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
The Forecast 1 year ago அரசு செய்திகள்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உயர்கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., தொழில் நுட்பக்கல்வி ஆணையர் வீரராகவராவ், இ.ஆ.ப.,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கோயம்புத்தூர் அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் 52 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டடங்கள், வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
உயர்கல்வித் துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள் :
தற்காலிக கட்டடங்களில் இயங்கி வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 12 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவிலும், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 12 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 14 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டடங்கள்;நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 ஆய்வகக் கட்டடங்கள் ; கோயம்புத்தூர், அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 9 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 15 வகுப்பறைகள் மற்றும் 10 ஆய்வகக் கட்டடங்கள்; என மொத்தம் 52 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உயர்கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., தொழில் நுட்பக்கல்வி ஆணையர் வீரராகவராவ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments