கன்னியாகுமரியின் புதிய மாவட்ட ஆட்சியராக அழகு மீனா இ.ஆ.ப., நியமிக்கப்பட்டுள்ளார்
The Forecast 1 year ago கன்னியாகுமரி
இந்தியா என்றதும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி என்ற நியாபகம் நாம் அனைவருக்கும் வரும். அப்படி இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள மாவட்டத்துக்கு ஆட்சி தலைவராக அழகு மீனா இ.ஆ.ப., பொருப்பேற்று உள்ளார். அழகு மீனா இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சி ஆணையராக திறமையாக பணியாற்றியதற்காக, தமிழக அரசின் உத்தரவின்படி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நிர்வாக திறமை, செயல்திறன் மற்றும் மக்களுக்கு நலவாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளை கருத்தில் கொண்டு இந்த உயர்வு கிடைத்திருக்கிறது என்பது மக்களின் கருத்து.
தாம்பரம் மாநகராட்சியில் தனது சிறப்பான செயல்கள் மூலம் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார் எனவும் நகரின் சுகாதாரம், சாலை மற்றும் பொது வசதிகள் போன்ற பல்வேறு துறைகளில், அவர் எடுத்த நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு மிகவும் பயன்தரும் வகையில் அமைந்திருப்பதாகவும் தாம்பரத்தை ஒரு நவீன நகரமாக மாற்றியதற்கு அவர் செலுத்திய உழைப்பும் நிர்வாக திறனும் பாராட்டுக்குரியது என மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பணி ஆற்றப் போகும் அழகு மீனா இ.ஆ.ப., அவர்களுக்கு மக்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நல் வரவேற்பையும் அளித்து வருகின்றனர். இவரின் நிர்வாகம் வெற்றி பெற 'THE FORECAST FRONT'ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
0 Comments