1013 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.108 கோடி கடன் இணைப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
The Forecast 1 year ago மதுரை
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை ஊராட்சியில் தமிழ்நாடு முழுவதும் 31.220 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 3,74,777 மகளிர்க்கு ரூ.2874.26 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்புகளை துவக்கி வைத்து 1013 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.108 கோடி கடன் இணைப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பிமூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினாகள் ஆவெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு). தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷிணி இ.ஆ.ப. செயல் இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் இ.ஆ.ப, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மோனிகா ரானா இ.ஆ.ப, மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments