Loading . . .




மே.வங்க அரசு மருத்துவமனைகளின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள், பொதுமக்கள் இணைந்து பல இடங்களிலும் மெழுவர்த்தி ஊர்வலம் நடத்தினர்

The Forecast 1 year ago மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் சூழலில் மே.வங்க மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு மே.வங்க அரசு மருத்துவமனைகளின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள், பொதுமக்கள் இணைந்து பல இடங்களிலும் மெழுவர்த்தி ஊர்வலம் நடத்தினர்.

ஆர்.ஜி.கர் மருத்துவமனை, சாகோர் தத்தா மருத்துவமனை, எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இளநிலை பயிற்சி மருத்துவர்கள் பேரணில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியை மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி ஒருங்கிணைத்தது.

பேரணியில் பங்கேற்றவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், அதற்கான பிரதிநிதிகளை முறையாக தேர்வு செய்தல், பணிக்குழு அமைத்தல் என பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாகோர் தத்தா மருத்துவமனையில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

முன்னதாக, 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திய பயிற்சி மருத்துவர்கள் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி தான் பணிக்கு திரும்பினர். எனினும் தங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பேரணி நடத்தியுள்ளனர். கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்குத் தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் முந்தைய நாள் நடத்தப்பட்ட இந்தப் பேரணி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

0 Comments

Post your comment here

மேற்கு வங்காளம் Relateted News