உத்வேகத்துடன் உழைப்போம், அயராது பாடுபடுவோம், லட்சியத்தை அடைவோம்! : INTUC மாநில தலைவர் பி.சிவப்பிரகாசம்
The Forecast 3 months ago காங்கிரஸ்
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான தொழிற்சங்க அமைப்புகளில் ஒன்றாகும். இது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவாக செயல்படுகிறது. INTUC - உற்பத்தி, தொழிற்சாலைகள், பொது சேவைகள், போக்குவரத்து, விவசாயம், கட்டுமானம், சுரங்கம், சேவைத் துறை உட்பட பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் அவர்களின் உரிமைகள், நியாயமான ஊதியங்கள், சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிடுகிறது. இது மாநில அளவிலான கிளைகள் மற்றும் இணைந்த தொழிற்சங்கங்கள் மூலம் இயங்குகிறது, தேசிய தொழிலாளர் பிரச்சினைகளை தீர்க்கும் போது உள்ளூர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது. சட்ட ஆதரவு மற்றும் சமூக நல முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம், தொழிலாளர் உறவுகளை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்துவதிலும் INTUC முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக, தமிழகத்தின் INTUC - தொழிலாளர் நலன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகுக்கிறது. தமிழக INTUC மாநில தலைவர் பி.சிவப்பிரகாசம் அவர்கள் பொறுப்பேற்ற பின் கட்சியின் மீது முழு கவனம் செலுத்தி கட்சியின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வருகிறார். மாநிலம் முழுவது சென்று தன்னுடன் இணைத்து செயலாற்ற அர்வமாக உள்ள காங்கிரெஸ் தோழர்களை மாவட்ட வரியாக, கிராமம் வாரியாக, தாலுகா வாரியாக சந்தித்து அவர்களின் திறனறிந்து நல்ல பொறுப்புகளை வழங்கி கட்சியின் வளர்ச்சிக்காக தங்களின் முழு உழைப்பையும் கொடுக்க வேண்டும், தமிழகத்தில் அணைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் கோடி பறக்க பாடுபடுவோம், அதுவே நமது லட்சியம் என கூறிவருகிறார்.
இந்திய காங்கிரஸ் தலைமை தமிழக INTUC மாநில தலைவராக பி.சிவப்பிரகாசம் அவர்களுக்கு பொறுப்பு வழங்கியத்தை தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாரதத்தின் இளம் தளபதி , லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை நேரில் சந்தித்தேன் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், அவருடன் இணைத்து பாரத் ஜுடோ பாதை யாத்திரைகளில் கலந்து கொண்டுதன் மூலம் " தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த தலைவரை கண்டோம்" என ராகுல் காந்தியை பற்றி தனது நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துகொண்டார். காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் மூலம் கிடைக்கும் உத்வேகம் எங்களை மேலும் உழைக்க வைக்கிறது என கூறினார்.
இப்பொழுது இருக்கும் INTUC சங்கத்தை மேலும் வலுபெற செய்து ஒரு போர் பாசறையாக மாற்றுவோம். தமிழகத்தின் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) இந்தியாவிலுள்ள அணைத்து மாநிலங்களிலும் மேலான ஒன்றாக வலு பெற ஒன்றாக உழைப்போம் , அயராது பாடுபடுவோம் என கோவை விமான நிலையத்தில் ஐ.என்.டி.யூ.சி. தேசிய தலைவர் சுவாமிநாத் ஜெய்ஸ்வாலின் வரவேற்புக்கு பின் அளித்த பேட்டியில் கூறினார்.
முன்னதாக கோவை விமான நிலையம் வந்த ஐ.என்.டி.யூ.சி. தேசிய தலைவர் சுவாமிநாத் ஜெய்ஸ்வாலுக்கு ஐ.என். டி.யூ.சி.சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு தமிழகத்தின் INTUC பணிகளை பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்து, தனது அறிவுரைகளையும் பகிர்ந்துகொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகளை பின்பற்றி வருவதாக கூறினார். இதனால் நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கூறிய அவர், இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்களின் மீது வரி சுமையை சுமத்துவதிலேயே மோடி அரசு கூடுதல் கவனம் செலுத்துவதாக குற்றம் சாட்டினார். தொழில் துறைகளை மேம்படுத்துவதில் அக்கறை இல்லாமல்,தொழிலதிபர்களை வளர்த்து விடுவதிலேயே மோடி தற்போது செய்து வருவதாக அவர் கூறினார்.
மேலும், நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், ஏழை மக்களின் எதிர்காலத்தை சிதைப்பதையே மத்திய அரசு விரும்புவதாகம், மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் சாதாரண மக்களின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக அவர் கூறினார்.
All the very best for INTUC tamilnadu team
Augustus
3 months ago