திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அருணாசலம் மன்றத்தில் நடைபெற்றது.
The Forecast 3 months ago காங்கிரஸ்
திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி அருணாசலம் மன்றத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புதுக்கோட்டை புஷ்பராஜ், மாநில செயலாளர் சேலம் சரவணன், வழக்கறிஞர் சந்திரசேகர், புருஷோத்தமன் ஆகியோர் மாநில பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிகளில் கிராம மற்றும் பூத் கமிட்டிகளை சீரமைத்து வலுவடையச் செய்யுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன.
முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் சிறப்புரையாற்றிய இந்த நிகழ்வில் திருவெறும்பூர் வட்டாரத் தலைவர்கள் செந்தில்குமார் ரகுவரன், அந்தநல்லூர் வட்டார தலைவர்கள் கனகராஜ், கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டம், வட்டார தலைவர்கள் கே.எஸ்.சுந்தரம் கருணாகரன், மணப்பாறை வட்டார தலைவர்கள் சத்தியசீலன், சிவ சண்முகம், வையம்பட்டி வட்டார தலைவர்கள் செல்வம் ராதாகிருஷ்ணன், மருங்காபுரி வட்டார தலைவர் குழந்தை தமிழரசன், நகரத் தலைவர்கள் மணப்பாறை செல்வா, துவாக்குடி ஆனந்தன், பேரூர் கமிட்டி தலைவர்கள் கூத்தைப்பார், அருணாச்சலம் பொன்னம்பட்டி பொன்னுச்சாமி சிறுகமணி கே ஆர் ராஜா மாவட்ட பொது செயலாளர்கள் அர்ஜூன் யுவன், மாவட்ட துணை தலைவர் எழிலரசன் செயலாளர் வீரபாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மணப்பாறை நஜீம் இளைஞர் காங்கிரஸ் தினேஷ் ஐஎன்டியுசி தலைவர்கள் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், இக்கூட்டம் மாவட்டத்தில் காங்கிரஸின் வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கைகளின் ஒரு படியாக அமைந்தது குறிப்பிட்டத்தக்கது.
0 Comments