அரசுப் பள்ளி மாணவர்கள், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சேர்க்கை பெற்று சாதனை புரிந்திட உதவிய தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
The Forecast 8 months ago தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சேர்க்கை பெற்று சாதனை புரிந்திட உதவிய தலைமையாசிரியர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு. சந்தர மோகன், இ.ஆ.ப, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் மரு. எம். ஆர்த்தி, இ.ஆ.ப., தாய்பே வர்த்தக மற்றும் கலாச்சார மையத்தின் தலைமை இயக்குநர் ஸ்டீபன் எஸ்.சி. ஷ, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா. சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments