தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 'அன்புக்கரங்கள்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் பெற்றோர் இருவரையும் இழந்தோர் அல்லது ஒருவரை இழந்த நிலையில், மீதமுள்ள பெற்றோர் குழந்தையை பராமரிக்க முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், 18 வயது நிறையும் வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 6,082 மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு கூறியதாவது, இந்த உதவித்தொகை மாணவர்களின் கல்வி மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் அமைந்துள்ளது. மேலும், சமூக அக்கறையுடன் செயல்படும் தமிழக அரசு, பெற்றோரற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருப்பது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
0 Comments